தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு சச்சிதானந்தம் வெற்றி இருக்கும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி ஏற்கெனவே சி.பி.எம். வேட்பாளர் அறிவிப்பின்போதே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார் அது தற்போது உறுதியாகி வருகிறது.
திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் சிபிஎம் வேட்பாளராக சச்சிதானந்தம். அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்.டி.பி.கட்சி வேட்பாளராக முகமது முபாரக். பாமக வேட்பாளராக திலகபாமா. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கயிலை ராஜன். உட்பட பல சுயாட்சிகளும் தேர்தல் களத்தில் போட்டியிட்டதின் பேரில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது
இப்படி நடந்து முடிந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு பெட்டிகளையும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமல் பாதுகாத்து வந்தனர். அதைத் தொடர்ந்துதான் இன்று வாக்கு எண்ணிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலேயே சிபிஎம் வேட்பாளராக களமிறங்கப்பட்ட சச்சிதானந்தம் முதல் ரவுண்டிலேயே 20 ஆயிரம் ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்தார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ரவுண்டுகளிலும் பல ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்று பதினெட்டாவது ரவுண்டில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 5 லட்சத்தி 60 ஆயிரத்து 527 வாக்குகளும். எஸ்டிபி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 243 வாக்குகளும். பாமக வேட்பாளர் திலகபாமா 91 ஆயிரத்து 561 வாக்குகளும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 80 ஆயிரத்து 684 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பார்க்கும்போது 18ஆவது சுற்றி 3 லட்சத்தி 69 ஆயிரத்து 254 ஓட்டுக்கள் வாக்குகள் கூடுதலாக சச்சிதானந்தம் வாங்கி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அதோடு இன்னும் ஆறு ரவுண்டுகள் இருப்பதால் அதன் மூலம் கூடுதலாக வாக்குகள் கிடைக்கும் அதைப் பார்க்கும் போது நான்கு லட்சத்து 50ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ஓட்டுகள் வரை கூடுதல் வாக்குகள் வாங்க வாய்ப்பு இருக்கிறது. அதன் மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை சி.பி.எம். வேட்பாளரான சச்சிதானந்தம் பிடித்து எம்.பி.ஆக வெற்றி பெறப்போவது உறுதியாக தெரிகிறது.
ஆனால் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் தமிழக அளவில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்தது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரின் முழு முழு ஆசியோடு தேர்தல் பிரச்சாரம் செய்ததன் மூலமே வெற்றி பெற்று இருக்கிறார். கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேலுச்சாமி 5,50,000 ஓட்டுகள் கூடுதலாக வாங்கி தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பிடித்தார். அதுபோல் தற்பொழுது திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 4 லட்சத்து 75ஆயிரம் முதல் 5 லட்சத்துக்குள் ஓட்டுகள் கூடுதலாக வாங்கி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.