தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 102 ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடத்தச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறது. அதன்அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டி. ஒன்றிய செயலாளர் பீர்முகமது முன்னிலையிலும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட செயலாளர், முன்னாள் மேயர் மருதராஜ் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரும் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ....வருகிற எட்டாம் தேதி தமிழக பட்ஜெட்டை எடப்பாடி போடப்போகிறார். அந்த பட்ஜெட் தமிழக மக்களை திக்குமுக்காட வைக்கப் போகிறது. அன்று முழுவதும் ஊர் ஊருக்கு இபிஎஸ் ஓபிஎஸ் பேச்சாகத்தான் இருக்கப்போகிறது. பாராளுமன்ற தேர்தல் கூடிய விரைவில் வர இருப்பதால் இப்பொழுதே வைகோ, தமிழகத்தில்.த.மா.க. கம்யூனிஸ்டு உட்பட கூட்டணிக் கட்சிகள் கூட்டணி சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழகம் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறினர். இக்கூட்டத்தில் நகர, ஒன்றியம் பொறுப்பாளர்கள் உள்பட பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.