புதியபார்வை ஆசிரியர் ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சையில் அவரது தமிழரசி மண்டபத்தில் ஆசிரியர் வீரமணி தலைமையில் நடந்தது. விழாவில் திமுக மாஜி எல்.ஜி, காசி ஆனந்தன், தனியரசு எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு நடராசன் வாழ்க்கை குறிப்பு ஆவணப்படத்தை வெளியிட்டனர்.
![dinakaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/S-byYhRl3nJWKkMT4SciTZB4sdODLSPNm6mHn3WtMkU/1553084468/sites/default/files/inline-images/ac13f21f-4c1e-4e98-9d1f-55aa907412c1.jpg)
விழா ஏற்பாடுகளை மருப்பா அறக்கட்டளை சார்பில் செய்திருந்தாலும் தினகரனின் அமமுகவினரே நிறைந்திருந்தனர். விழாவில் பேசிய தினகரன். அரசியல் பேசவில்லை. என் சித்தப்பா நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சின்னம்மா கேட்டுக் கொண்டார். அதனால் என் வேலைகளை தள்ளிவைத்துவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லும் போதே கண்கள் கலங்கி பேச்சை முடித்துக் கொண்டார்.
![dinakaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/bpQQyvS1ExRmTL765jI5iz6pnO9-KCBnQ79jXraW_ho/1553084496/sites/default/files/inline-images/be4a72df-50ae-4339-9d89-90600cd8d635.jpg)
சில மாதங்களுக்கு முன்பு நடராசனின் பிறந்த நாளை மறந்த தினகரன் தேர்தல் காலம் என்பதாலோ என்னவோ நினைவு நாளை அனுசரிக்க வந்துள்ளார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். நினைவு நாள் விழாவுக்கு திவாகரன் உள்பட சசிகலா உறவினர்களை காணமுடியவில்லை.