![devotess not allowed at the function of paramapathagate open](http://image.nakkheeran.in/cdn/farfuture/aRVutWW7jfp-VIC0zDtpUOxh0MvHaOBgBYknWnXyBJg/1639028165/sites/default/files/inline-images/paramapatha-vaasal.jpg)
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் 14ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. வருகின்ற இருபத்தி நான்காம் தேதி வரை நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசியன்று மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்று 4:45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து முறைப்படியான பூஜைகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு அன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மூலவரையும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உற்சவரையும் தரிசிக்கலாம். இந்த முறை 2019ஆம் ஆண்டு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சொர்க்கவாசல் திறப்பு பின்னர் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.