Skip to main content

கரூர் மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சிகளின் தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்வாக உள்ளவர்களின் விவரம்!

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

Details of those who have been elected unopposed as Heads of Municipalities and Municipalities in Karur District!

 

கரூர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சியில் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 11- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகுந்தலா பல்லவிராஜா, பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 20- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முனவர்ஜான், புகளுர் நகராட்சிக்கு உட்பட்ட 2- வது போட்டியிட்டு வெற்றி பெற்ற குணசேகரன் ஆகியோர் நகராட்சிகளின் தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

 

அதேபோல், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 7- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா் ஜெயந்தி, உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள 2- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திவ்யா, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் உள்ள 12- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேதுமணி, நங்காவரம் பேரூராட்சியில் உள்ள 17- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஸ்வரி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் உள்ள 4- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சௌந்தரபிாியா, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள 7- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரூபா முரளிராஜா, மருதூர் பேரூராட்சியில் உள்ள 4- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகுந்தலா ஆகியோர் பேரூராட்சி மன்றத் தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

 

மாநகராட்சி மேயர், துணை மேயர், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் இன்று (04/03/2022) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்