Skip to main content

மணமேல்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி..!

Published on 15/08/2017 | Edited on 15/08/2017
மணமேல்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள மணமேல்குடி மேலஸ்தானம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் அவரது மகள் சிவரஞ்சனி (13) அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளயில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிவரஞ்சனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவரஞ்சனிக்கு டெங்கு காய்ச்சல் என்று மருத்துவர்கள் சொன்னதாக உறவினர்கள் சொன்னாலும் சுகாதாரத்துறை மர்ம காய்ச்சல் என்று கூறுகிறது.நேற்று முன்தினம் மாலை கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்ட சித்தார்த் (4) என்ற சிறுவன் உயிரிழந்தான் இன்று பள்ளி மாணவி சிவரஞ்சனி இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  
- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்