மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு
மாதந்தோறும் சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, செப்.7- கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குநர்களுக்கு மாதந்தோறம் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். 5.7.2017 அரசாணைப்படி ஊழியர்களின் பெயர்பட்டியலை பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கம் சார்பில் வியாழக்கிழமையன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு சங்கத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் ப.சண்முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, கிராமப்பஞ்சாயத்து இணைப்புக்குழு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
இரா. பகத்சிங்