தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். நிதிநிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் கடன் வசூலை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதோடு வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகளான சி.பி.எம், சி.பி.ஐ, சி.பி.எம் (எம்.எல், எல்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒருபகுதியாக சென்னை திருவான்மியூர் சிக்னல் சந்திப்பில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்று இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியா முழுக்க மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி தொகையாக மத்திய அரசு 1.50 லட்சம் கோடி வழங்க வேண்டியுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 11,700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.