வேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ளது அமிர்தி வனப்பகுதி. இது சுற்றுலா தலமாகவும் உள்ளது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சுற்றுலா வருகின்றனர். இதில் அதிகளவு வருவது காதலர்கள் என்பது குறிப்பிடதக்கது.
வேலூர் மாநகரில் உள்ள பிரபலமான அந்த கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மூன்றாம்மாண்டு படிக்கும் மாணவியும், வேலூர் வேலப்பாடியை சேர்ந்த அந்த மாணவியும் காதலனும், அமிர்திக்கு வந்துள்ளார்கள்.
காடு பகுதியான அமிர்த்தியின் அடர்ந்த பகுதிக்கு காதலர்கள் சென்றுள்ளனர். அங்கு காதலனின் நண்பர்கள் 3 இளைஞர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் இவள் தான் என் காதலி என அறிமுகம் செய்துள்ளான். காதலனின் நண்பர்கள் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளனர். அந்த மிருகங்களிடம்மிருந்து தப்பி ஓடிவந்துள்ளார் அந்த மாணவி. என்னை காப்பாத்துங்க என கத்தி அழுதுக்கொண்டே ஓடிவர அங்கு விறகு பொறுக்கவும், கால்நடை மேய்க்கவும் வந்திருந்தவர்களின் காதுகளில் சத்தம் கேட்டு, அவர்கள் சத்தம் வந்த பகுதியை நோக்கி ஓடிவந்துள்ளனர். ஆடை கிழிந்து மானத்தை காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்த அந்த மாணவியை காப்பாற்றிய சமானிய மக்கள், துரத்தி வந்தவன்களை மடக்கியுள்ளனர். காதலன் மட்டும் சிக்க, மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனராம்.
காதல் என்கிற பெயரில் மாணவியை மயக்கி நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்றவனை பிடித்து மிதிமதியென மிதித்துள்ளனர். பின்னர் செல்போன் மூலமாக அந்த பெண்ணின் பெற்றோரை வரவைத்து அவர்களிடம் அந்த மாணவியை ஒப்படைத்துள்ளனர்.
இதுப்பற்றி புகார் தந்தால் மகளின் மானம் மட்டும்மல்ல, குடும்ப மானமும் போய்விடும் என்பதால் அந்த மாணவியின் குடும்பம் புகார் தராமல் விட்டுள்ளது. அதோடு கல்லூரிக்கு அனுப்புவதையும் நிறுத்தியுள்ளது என கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது பரவி வேலூர் மாநகரில் கல்லூரி மாணவ – மாணவிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.