தீபக் மிஸ்ராவுக்கு விஜயகாந்த் வாழ்த்து
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள தீபக்மிஸ்ராவுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வாழ்த்து :
உச்ச நீதிமன்றத்தின் 45-வது இந்திய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக்மிஸ்ரா அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தாம் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு எதிராக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த பல அவதூரு வழக்குகளுக்கு தடைவிதித்து, ஜெயலலிதாவுக்கு எதிராக பல கண்டனங்கள் தெரிவித்தவர் நீதிபதி தீபக்மிஸ்ரா.
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய டெல்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தவரும் நீதிபதி தீபக்மிஸ்ரா, திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஆக்கியதும் நீதிபதி தீபக்மிஸ்ரா. குற்றப்பின்னணி உள்ளவர்களை பிரதமராகவோ, முதல்வராகவோ அல்லது மந்திரியாகவோ பதவிபிரமானம் செய்து வைக்கக்கூடாது என குடியரசு தலைவர் மற்றும் கவர்னருக்கு மனோஜ் நருல்லா என்ற தீர்ப்பில் பரிந்துரைகள் செய்ததும் நீதிபதி தீபக்மிஸ்ரா அடங்கிய அமர்வுதான். இதுபோன்ற பல அதிரடியான உத்தரவுகலை பிறப்பித்த நீதிபதி தீபக்மிஸ்ரா, மேலும் பல நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கி தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், ஊழல் இல்லாத அரசுகள் உருவாகவும் மற்றும் நிலுவையில் உள்ள பல வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர பல வகையான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் நடவடிக்கைகளை அவர் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’’