Skip to main content

கடல் மண்ணை சாலைக்குக் கொண்டுவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

The deep depression that brought the sea sand to the road!

 

தமிழ்நாடு முழுவதும் பருவ மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குக் கனமழை பெய்திருக்கிறது. கடந்த சிலதினங்களுக்கு முன்பாக வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மாலை சென்னை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையைக் கடந்தது.

 

இதனால், நேற்று சென்னையில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையின் லூப் சாலையில் கடல் மண் படிந்துள்ளது. இதனால், இன்று வாகன ஓட்டிகள் அச்சாலையில் பயணிக்கும்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்

 

 

சார்ந்த செய்திகள்