துக்க வீட்டில் மின்சாரம் தாக்கி 15 பேர் பாதிப்பு!
ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதியை சேர்ந்த சின்னையா என்பவர் நேற்று மாலை இறந்துவிட்டார். இதனையடுத்து அவரது உடலை வீட்டில் பிரீசர் பாக்ஸ்ஸில் வைத்துள்ளனர். அப்போது துக்கத்திற்கு சென்ற அவரது உறவினர்கள் பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த சின்னையா உடலை சுற்றி அமர்ந்து அழுது கொண்டிருந்தனர்.
அப்போது பிரீசர் பாக்ஸில் ஏற்பட்ட மின்கசிவால் அதனை சுற்றி இருந்தவர்களை மின்சாரம் தாக்கியது. இதில் 2 ஆண்கள் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மின்சாரம் தாக்கியவர்களை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் அதிகளவு மின்சாரம் தாக்கிய தில்லைநாயகி(45) லெட்சுமி(42), மாரிக்கண்ணு(38) அம்பிகா, காமாட்சி, மலர், தமிழரசி, ராஜகுமாரி, மணிகண்டன் ஆகிய 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். துக்கத்திற்கு சென்றவர்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இரா.பகத்சிங்