Published on 01/08/2024 | Edited on 01/08/2024
வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டிற்காக 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று வரை சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் 1809.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது.
இதனால் சென்னையில் 1817 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், இன்று (01.08.2024) முதல் 1817 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.