புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வை தொடங்கியுள்ளனர். வேளச்சேரியில் உள்ள ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வைத் தொடங்கிய மத்திய குழுவினர், எண்ணூர், அத்திப்பட்டு, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் டிசம்பர் 8- ஆம் தேதி டெல்லி திரும்புகின்றனர். மத்திய குழுவினரின் ஆய்வின் போது தமிழக அரசின் உயர் அதிகாரிகளும், காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கீடு செய்து மத்திய அரசுக்கு மத்திய குழு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.