Skip to main content

கோவை அருகே இருவர் வெட்டி கொலை

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
கோவை அருகே இருவர் வெட்டி கொலை

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஆனந்த் தனது நண்பரான செல்வதுடன் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சரமாறியாக வெட்டபட்டனர். இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைகாக மருத்துமனை கொண்டு வரும் வழியில் செல்வமும் உயிரிழ்ந்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினோத் என்பவர் படுகொலை செய்யப்படதற்கு பழி வாங்கும் விதமாக தற்போது சிறையில் இருந்த வெளியில் வந்தவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செல்வபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சூர்யா, பாபுஜி, மோகன், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்பகை காரணமாக கொலை செய்யபட்டார்களா அல்லது வேறெதாவது காரணமாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டபகலில் மக்கள் அதிகம் வசிக்க கூடிய செல்வபுரம் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருள்குமார்

சார்ந்த செய்திகள்