Skip to main content

கடலூரில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் போராட்டம்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
கடலூரில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் போராட்டம்!



பழைய ஓய்வுதிய திட்டத்தை அமுல்படுத்துவதல், 7வது ஊதிய திட்டத்தை அமுல்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட ஊர்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் போரட்டங்களில் ஈடுபட்டனர்.

விருத்தாசலத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், 200க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வுதிய திட்டத்தை நிறுத்திவிட்டு பழைய ஓய்வுதிய திட்டத்தை வழங்குதல், ஊதிய குழுவின் இடைக்கால நிவாரணம் வழங்குதல், 7வது ஊதிய திட்டத்தை அமுல்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

பின்னர் 200க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர், பின் காவல் துறையினர் அவர்களை சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். போராட்டத்தையொட்டி காவலர்கள் அதிகமாக குவிக்கப்பட்டதால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

இதேபோல் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தையொட்டி அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் பல்வேறு பணிகளுக்கு அலுவலகங்கள் வந்த பொது மக்களின் பணிகள் பாதிக்கப்பட்டன. மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்