கடலூர் மாவட்டத்தில், 'நிவர்' புயல் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் நாகராஜன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய, சிதம்பரம் அருகே இருக்கக்கூடிய, கடற்கரை கிராமங்களான பெராம்பட்டு, பரங்கிபேட்டை, சின்னூர், நொச்சிக்காடு ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஐ.ஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது; கடலூர் மாவட்டத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு (120), தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைக் குழு (80), மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (225) மற்றும் 5 படகுகளுடன் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்களில் புயலினால் ஏற்படக்கூடிய பாதிப்பை உடனடியாக சீர் செய்ய, காவல் அதிகாரிகள், காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், ஜே.சி.பி மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.
இவருடன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் உள்ளிட்ட வருவாய், காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர்.