Skip to main content

கடலூர் நோயாளி உயிரிழப்பு - அறிக்கை தர உத்தரவு!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

cuddalore district govt hospital patient incident minister order

 

திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று (20/05/2021) உயிரிழந்தார். ஆக்சிஜன் கருவியை நீக்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது மனைவி புகார் தெரிவித்தார்.

 

இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்து அறிக்கைத் தர மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், நோயாளி ராஜா முகக்கவசத்தைத் தாமாகவே நீக்கிவிட்டு காலை உணவு சாப்பிட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குவந்த மற்றொரு நோயாளியைக் காப்பாற்ற ஆக்சிஜன் கருவி தேவைப்பட்டது. ராஜா உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததால், அவரது ஆக்சிஜன் கருவி ஆபத்தான நிலையில் இருந்தவருக்குப் பயன்படுத்தப்பட்டது. அவசரத் தேவைக்காக ராஜாவின் ஆக்சிஜன் கருவியைப் பயன்படுத்தி ஆபத்திலிருந்த நோயாளி காப்பாற்றப்பட்டார். ராஜா சாப்பிட்டு முடித்ததும் வேறொரு ஆக்சிஜன் கருவியைப் பொருத்த மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். உணவு சாப்பிட்டபோது திடீரென ராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்