கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்!
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் அருகே உள்ள கோழிப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜி(35). டிராவல்ஸ் உரிமையாளர். இவர் நேற்று காலை சென்னை செல்வதற்காக அவருடைய காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். காரை அவரது தம்பி அன்பு ஓட்டி சென்றார். காலை 8.30 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது விஜிக்கு இயற்கை உபாதை ஏற்பட்டது.
காரை நிறுத்திவிட்டு இருவரும் பெண்ணையாற்றுக்கு சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இருந்த போதிலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கார் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காளிதாஸ்