கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் ஸ்ரீஅபிநவ் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஹென்றி லாரன்ஸ், தொழிலாளர் துறை அலுவலர் ஞானபிரகாசம், தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமாவளவன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ்குமார், ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் "வேண்டும் வேண்டும்! பள்ளி வயதில் படிப்பு வேண்டும்!!" "ஒழிப்போம், ஒழிப்போம்! குழந்தை தொழிலாளரை ஒழிப்போம்!!" " காப்போம் காப்போம்! பெண் குழந்தைகளை காப்போம்!!" " மீட்போம் மீட்போம்! நாட்டின் பெருமைகளை மீட்போம்!!" "பெண் குழந்தையை போற்றுவோம்!" "மானுடத்தை காப்பாற்றுவோம்!" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் முழுக்கங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். கடலூர் நியூசினிமா இறக்கத்திலிருந்து டவுன்ஹால் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடந்த 3 வருடங்களில் கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக பதிவான பாலியல் குற்ற வழக்குகள் 159. சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்மந்தபட்ட குற்றவாளி பழனிசாமிக்கு அதிகபட்சமாக 55 ஆண்டுகள் தண்டணையும், குறிஞ்சிப்பாடி காவல் நிலைய குற்ற வழக்கில் அஜித் மற்றும் பண்ருட்டி காவல் நிலைய குற்ற வழக்கில் சம்மந்தபட்ட ராஜீவ்காந்தி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 10 வருடம் மற்றும் 10 வருடத்திற்கு மேல் தண்டணை பெற்றவர் 17, மொத்தம் 23 எதிரிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தரபட்டுள்ளது என குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.