வருங்கால வைப்பு நிதி (EPF) பணியாளர் தனிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும், TNCSC கிட்டங்கியில் சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை வழங்க வேண்டும், DA104 % மற்றும் ATM ல் ஊதியம் வழங்க வேண்டும், கட்டுப்பாடு அற்ற பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும், பணியின்போது இறந்த பணியாளர் வாரிசுகளுக்கு உடன்பணி வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருள்கள் நகர்வு செய்யும் லாரியில் நகர்வு பணியாளர் வர வேண்டும், மேலும் ரூட் சார்ட் படி நகர்வு பணி செய்ய வேண்டும், சரவணபவா மொ.கூ பண்டகசாலையில் பணிபுரியும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிவரன்முறை ஆனை, சர்விஸ் பதிவேடு பராமரிப்பு, சுயசேவை பிரிவில் இருப்பு குறைவு பிரச்சனை களைய வேண்டும், பதிவாளர் சுற்றறிக்கையின்படி சொந்த கட்டிடத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு கழிப்பறை கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் தங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.