
ராஜஸ்தான் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவத்தில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவர் அப்பகுதியில் உள்ள ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இவரை அடிக்கடி சாதி ரீதியாக பேசி அவமானப்படுத்தியுள்ளனர். சம்பவத்தன்று அந்த இளைஞர்கள் இவரை வம்பிழுக்க, இவரும் அவர்களை பதிலுக்கு திட்டியுள்ளார். இதனால் கோபமான அவர்கள், அவரை கடுமையாக தாக்கியதோடு மட்டுமில்லாமல், கையில் வைத்திருந்த மதுவை அவரின் வாயில் ஊற்றியுள்ளனர். அதிலும் கோபம் அடங்காத அவர்கள் சிறுநீரை எடுத்து அவரின் வாயில் ஊற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உமேஷ் மற்றும் பீர்பால் என்ற இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.