Skip to main content

உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

cpm supports farmers and demands various things

 

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த 6 நாட்களாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், டிசம்பர் 1 -ஆம் தேதி உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

நகரச் செயலாளர் கே.தங்கராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன் எம்.ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஆ.தேவி, ஜெ.ஜெயக்குமார் டி.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், நிபந்தனை இல்லாமல் மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கைவிட வேண்டும், விளைப் பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 


 

சார்ந்த செய்திகள்