புதுச்சேரி மாநிலம் மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த முனுசாமி தீபா தம்பதியரின் மகன் கணேசன் (10 ) இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரை அவரது பெற்றோர்கள் கண்டித்ததால் சிறுவனுக்கு உறவினர்கள் அளித்த ரூ 500 கையில் இருந்ததால் பெற்றோர்கள் மீது உள்ள கோபத்தில் அதை எடுத்துக் கொண்டு புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த பேருந்தில் ஏறி சிதம்பரத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அவர் திங்கள்் கிழமை இரவு கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இதனை கண்காணித்த அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்குழு உறுப்பினரான சின்னையனிடம் ஒப்படைத்தனர். சிறுவனிடம் அவர் பேச்சு கொடுத்து அவர் யார் எங்கிருந்து வந்தார் என்பது குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டுள்ளார்.
பின்னர் இதனிடையே அவரது தாயின் செல்போன் எண்ணை அந்த சிறுவன் கூறியதால் அவரது தாயருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் குடும்பத்தார் புதுச்சேரி காவல் நிலையத்தில் இது குறித்து ஏற்கனவே புகார் செய்துள்ளனர். மகன் சிதம்பரத்தில் உள்ளான் என்ற தகவல் கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு உடனடியாக சிதம்பரத்திற்கு திங்கள் கிழமை இரவு வந்தனர்.
இதனிடையே சிறுவனை மீட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு உறுப்பினர் சின்னையன் சிறுவனுக்கு அவரது வீட்டில் உணவு வழங்கி கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். மகன் கிடைத்த மகிழ்ச்சியில் சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி. ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.