தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட வேண்டும், கஜா புயல் நிவாரண தொகையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் என வலியுத்தி நவம்பர் 24ம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆயிரம் மையங்களில்தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம் "கஜா புயல் தாக்குதல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பலத்த சேதமடைந்து வீடுகள் இடிந்து, விவசாயம் பாதித்தும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தமிழக அரசு மீட்பு பணிகளை சரிவர செய்யவில்லை, தமிழக முதல்வர் நிவாரண பணிகள் குறித்து உண்மைக்கு மாறாக தகவல் தெரிவித்து வருவது கண்டிக்கதக்கது.
தமிழக முதல்வர் துணை முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடாதது கண்டிதக்கது.தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாகஇல்லை. இதன் காரணமாக மக்களை சந்திக்க முதல்வர் அச்சப்படுகிறார். எனவேநிவாரணத்தை உயர்த்தி அளிக்க வேண்டும்.
பயிர் காப்பீடு தேதியை உயர்த்தி பிரிமீயம் தொகையை அரசே ஏற்க வேண்டும். தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நேரிடியாக வரவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24ம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆயிரம் மையங்களில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.