சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்க ஆயத்தமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
அப்படியெல்லாம் இல்லை ஆனால் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதற்கான காலம் நேரம் பார்த்து ஆரம்பிப்பேன்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு
பெண்களுக்கு எல்லாவற்றிலும் சம உரிமை வேண்டும் என்பது நல்லது. ஆனால் அது ஒரு கோவில் ஒவ்வொன்றிக்கும் ஒரு சடங்கு இருக்கும், காலம் காலமாக ஐதீகம் என்று ஒன்று இருக்கும் எனவே அதில் வேறொருவர் தலையிடக்கூடாது என்பது எனது கருத்து. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் ஆனால் மதம் சார்ந்த விசயங்களில் கொஞ்சம் பார்த்து பண்ணவேண்டும்.
மீடூ விவகாரம் பற்றிய கேள்விக்கு,
இது பெண்களுக்கு சாதகமான மூவ்மெண்ட், பெண்கள் மிஸ் யூஸ் பண்ணகூடாது எனக்கூறினார்.
வைரமுத்து அப்படி ஒன்று நடக்கவே இல்லை அதற்கு ஆதாரம் இருக்கிறதாகவும் கூறி மறுத்துள்ளார். உண்மையிருந்தால் வழக்கு தொடுக்கலாம் எனவும் கூறியுள்ளார் எனக்கூறினார்.
பேட்ட டயலாக் ஒன்று சொல்லும்படி செய்தியாளர் கேட்டதற்கு,
பேட்ட பராக் எனக்கூறி நகர்ந்தார்.