Skip to main content

மூன்றாம் பாலினத்தவருக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி - நீதிமன்றத்தின் உத்தரவு..!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

The court closed the case of Grace Banu who asked for a vaccine for the transgender
                                                       கோப்புப்  படம் 

 

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி  மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கவும், தடுப்பூசி முகாம் நடத்தவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

 

அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2000 ரூபாயை வழங்கிவிட்டதாகவும், இரண்டாம் தவணையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

அதனை ஏற்ற நீதிபதிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு இரண்டாம் தவணை வழங்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதாகக்  குறிப்பிட்டு, அவர்களுக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்ய அரசிற்கு உத்தரவிட்டு, கிரேஸ்பானு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்