மணல் திருட்டில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை விடுவிக்கக்கோரும் மனுக்கள் மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை இனிமேல் வட்டாட்சியர் விடுவிக்க முடியாது. இனிமேல் அதிகாரிகளே விடுவிக்க முடியாது. வாகனங்களை விடுவிக்க வேண்டுமானால் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே வாகனங்களை மீட்க முடியும். அப்படி மணல் திருட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க 50 ஆயிரம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மணல் திருட்டு தொடர்பான வழக்கின் ஆவணங்களை போலீசார் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் தரவேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பாக மாவட்ட நீதிமன்றங்களுக்கு வட்டாட்சியர் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.