தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர கரோனா குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்!
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட சேவைக்கு இ- பதிவுடன் அனுமதிக்கப்படும்.
எலெக்ட்ரீசியன், பிளம்பர்கள், இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் தொழில் செய்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுய தொழில் செய்பவர்கள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இ- பதிவுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹார்டுவேர்ஸ், மின் பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படலாம்.
சைக்கிள், பைக் பழுது நீக்கும் கடைகளும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படலாம்.
வாகன உதிரிபாக விற்பனை, கல்வி புத்தகம், எழுது பொருட்கள் விற்பனை கடைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுது பார்க்கும் மையமும் (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்படலாம்.
வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவசர காரணத்துக்காக மட்டும் சுற்றுலா ஊர்களுக்கு அனுமதி!
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிக்கு அவசர காரணங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவசர காரணங்களுக்காக மட்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் இ- பதிவு பெற்று பயணிக்கலாம்.
அரசு அறிவித்துள்ள தளர்வுகள் வரும் ஜூன் 7- ஆம் தேதி அன்று காலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.