Published on 14/10/2020 | Edited on 14/10/2020
இந்தியர்கள் யாராவது மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கரோனாவுக்கு இம்ப்ரோ மருந்தை சோதனைக்கு உட்படுத்தி முடிவுகளை வெளியிட உத்தரவிடக்கோரி மருத்துவர் சுப்ரமணியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (14/10/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தியர்கள் யாராவது மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா? ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்படாததில் பல்வேறு அரசியல் நகர்வுகள்வேறு உள்ளன என்று கூறிய நீதிபதிகள், இம்ப்ரோ மருந்து தொடர்பான ஆய்வறிக்கையை அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.