தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களை மூன்று வகைகளாகப் பிரித்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்கள் எவை? என்பது குறித்து பார்ப்போம்!
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் வகை 1-ல் இடம் பெற்றுள்ளன.
வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு என்னென்ன? தளர்வுகள் என்பதைப் பார்ப்போம்!
வகை 1-ல் இடம் பெற்றுள்ள 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டச் செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான புதிய தளர்வுகளை அரசு அறிவிக்கவில்லை.