Published on 11/06/2020 | Edited on 11/06/2020
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா இல்லாத மாவட்டமாக இருக்கிறது கோவை. கரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளதை அறிந்துள்ளோம். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டது.
பிறந்த மூன்று நாள் ஆன குழந்தை முதல் வயதானவர்கள் வரை கரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மருத்துவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும். மீண்டும் கடுமையான ஊரடங்கு குறித்து மருத்துவக்குழுவின் ஆலோசனைப்படி முதல்வர் நடவடிக்கை எடுப்பார். தடுப்பு நடவடிக்கைளை கருத்தில்கொண்டு மருத்துவ குழு பரிந்துரை பேரில் முதல்வர் முடிவெடுப்பார்" என்றார்.