திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 156 டாஸ்மார்க் கடைகள் செயல் பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் தினமும் சராசரியாக மூன்று கோடிக்கு மேல் குடிமகன்கள் மூலம் மதுபானம் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு 14ம்தேதி வரை விடுமுறை விடப்பட்டது அதை தொடர்ந்து மதுபானங்கள் அனைத்தும் அந்தந்த டாஸ்மாக் கடைகளில் இருந்தன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை ஒரு கும்பல் கொள்ளை அடித்து விட்டு சென்றது. அதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இதேபோல் சில மாவட்டங்களிலும் மதுக்கடைகளில் கொள்ளை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தான் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மதுபானத்தை டாஸ்மாக் குடோனுக்கு மாற்றும்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாகிகளுக்கு திடீரென அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 156 டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானத்தை திண்டுக்கல்லில் உள்ள டாஸ்மாக் குடோன் மற்றும் திண்டுக்கல் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பழனி ஆகிய 6 ஊர்களிலும் தலா ஒரு திருமண மண்டபங்களை பிடித்து அந்த திருமண மண்டபங்களில் இந்த மதுபானங்களை வைத்து சீல் வைத்தவுடன் மட்டுமல்லாமல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ள மது பாட்டில்களை கண்காணிக்க டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஊழியர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி திருடர்களுக்கு பயந்து டாஸ்மாக் கடையில் உள்ள மது பானங்களை திருமண மண்டபங்களில் வைத்து அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்பதுதான் கரோனா வைரஸை விட கொடுமையானது.