கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் அனுஸ்ரீ. இவர் சீனாவில் உள்ள சாங்கி சீ புரோவின்ஸ் சியான் மகாணத்தில் மருத்துவம் பயின்று வந்தார். கொரோனா வைரல் சீனாவில் அதிவேகமாக பரவி வரும் நிலையில் அனுஸ்ரீ இந்தியா திருப்பியுள்ளார். இந்நிலையில் சீனாவில் உள்ள களநிலவரத்தை மாணவி அனுஸ்ரீ நம்மிடம் பகிர்ந்தார்.
அப்போது முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீயான் தாங் மருத்துவ பல்கலைகழகத்தில் தன்னுடன் படித்து வந்தனர். அங்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அங்கிருந்து இந்தியா வர அவர்கள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யபட்டது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது தந்தையின் முயற்சியால்தான் நான் தற்போது இந்தியா வந்துள்ளேன் என தெரிவித்தார்.
மேலும் அங்கு தங்கியிருந்த போது கொரோனா வைரஸ் காரணமாக தெருக்களே வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கபட்டது. இதனால் அன்றாட தேவைக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் போனது. மேலும் உணவுத்தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டது. கொரானோ வைரஸ் தடுக்க எண் 95 மற்றும் சர்ஜிக்கல் வகை மாஸ்குகள் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு தற்போதும் நிலவி வருகிறது என தெரிவித்தார்.
சீனாவில் இருந்து மலேசியா வழியே திருச்சி வந்து கோவை வந்ததாக கூறிய மாணவி விமான நிலையத்தில் தங்களை பரிசோதனை செய்து நோய் குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் வீட்டிற்கு அனுப்பிவைத்ததாக தெரிவித்தார்.