Skip to main content

ஊரடங்கால் மே 1ல் கிராம சபை கூட்டம் நடத்த தடை!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
Grama Sabha




தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். 


ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த வளர்ச்சிப் பணிகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், நிதி பயன்பாடு உள்ளிட்ட வரவு, செலவு கணக்குகளை மக்கள் முன்னிலையில் சமூகத்தணிக்கை செய்யப்படும். 


இந்நிலையில், கரோனா வைரஸ் நோய் தொற்று அபாயம் காரணமாக தமிழ்நாட்டில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடப்பு ஆண்டு மே 1ம் தேதி நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து கிராம மக்களுக்கும் தண்டோரா, ஒலிபெருக்கிகள் வாயிலாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்