நாடு முமுவதும் கரோனா வைரஸ் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் 16 போ் கரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளனா் என அந்த மாநில அரசு அதிகார பூா்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவில் பள்ளிகள், தியேட்டா்கள் மூடப்பட்டுள்ன. மேலும் மக்கள் அதிகம் வந்து செல்கிற முக்கிய சுற்றுலா தலங்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே பங்குனி மாத பூஜைக்காக சபரிமலைக்கு பக்தா்கள் யாரும் வரவேண்டாம் என்று கேரளா தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் 9-ம் தேதி நடந்த பொங்கல் விழாவில் சுமார் 45 லட்சம் போ் பொங்கல் இடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கு பாதி தான் கலந்து கொண்டனா். அந்தளவு கேரளாவில் கரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கேரளா அரசுக்கு சொந்தமான திருவிதாங்கூா் மன்னா் வாழ்ந்த அரண்மனை குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் உள்ளது. கேரளா அரசின் கட்டுபாட்டில் இருக்கும் இந்த அரண்மனைக்கு வெளிநாடு, வெளிமாநில மற்றும் உள்ளூா் சுற்றுலா பயணிகள் என தினமும் ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனா். இதனால் கரோனோ வைரஸ் தாக்க கூடும் என்ற அச்சத்தில் அரண்மனையை கேரளா அரசு இழுத்து மூடியுள்ளது. இதனால் அரண்மனை திறக்காததால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா்.