சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி அமமுக சார்பிலும், தென்சென்னை எம்.ஜி.ஆர். மன்றம் சார்பிலும் ஐஸ் ஹவுஸ் பகுதி பாலாஜி நகர் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 200 பேருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் தலா ரூபாய் 200ம் கொடுத்து உதவினார் திருவல்லிக்கேணி அ.ம.மு.க. பகுதி செயலாளர் சேப்பாக்கம் எல்.ராஜேந்திரன்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து உழைக்கின்றனர். கடவுளுக்கு நிகராக அவர்களை மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த மாபெரும் சேவையில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவி செய்யும் வகையில்தான் எங்களால் இயன்ற ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் அரிசி, மளிகைப் பொருள்கள் வாங்க இருநூறு ரூபாய் பணமும் கொடுத்து உதவினோம் என்றார் எல்.ராஜேந்திரன். இந்த நிகழ்ச்சியின்போது தென்சென்னை மாவட்ட வடக்கு MGR மன்ற மாவட்ட செயலாளர் கணேஷ் (ர்) டி மோகன், மீனவர் பிரிவைச் சேர்ந்த மகேந்திரன், வ.செ. அற்புதராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.