Skip to main content

டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு... அரசு அளித்த விளக்கம்!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பிரபல மருத்துவர் சைமன், கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய முயன்றபோது, அவரை அங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். மேலும் கற்களை வீசி, அவர்கள் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது உடல் வேலப்பன்சாவடியில் அடக்கம் செய்யப்பட்டது. தனது கணவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலைத் தோண்டி தங்கள் மதம் சார்ந்த கல்லறையில் அடக்கம் செய்ய உதவும்படி முதல்வரிடம் மருத்துவர் சைமன் மனைவி, ஆனந்தி சைமன் கோரிக்கை வைத்தார்.

  doctor  wife



இந்நிலையில், கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற டாக்டர் சைமன் மனைவி வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. அதாவது, மீண்டும் சடலத்தை வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்டபின், மீண்டும் வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதால் ஆனந்தி சைமனின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்