இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக இருந்து வந்தது. அதன்பிற்கு மாநிலங்கள் தங்கள் நிலைக்கேற்றவாறு முடக்கங்களையும், தளர்வுகளையும் அறிவித்தன. அதன்படி முதல் அலை முடிவில் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக மூடப்பட்டன. தற்போது இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்ததைத் தொடர்ந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்வை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் துவக்கி வைத்தார். உடன் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ மருத்துவர் எழிலன் மற்றும் கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் ஆகியோர் இருந்தனர்.