Published on 08/06/2021 | Edited on 08/06/2021
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் சென்னை வண்டலூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதும், இதில் ஒரு பெண் சிங்கம் உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேற்று முன்தினம் (06.06.2021) கேட்டறிந்தார். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கு இன்று கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. யானைகளிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு உ.பி.யில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட உள்ளது.