Skip to main content

தமிழகத்தில் கரோனாவுக்கு முதல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

corona police



சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி (வயது47) கரானாவுக்கு பலியானது, சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 5-ந் தேதி அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆய்வாளரின் 2 கார் ஓட்டுனர்கள், 2 காவலர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஐ.ஐ.டி வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இதனிடையே, பாலமுரளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் 8-ந் தேதி ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்பாட்டின்பேரில், ஐதராபாத்தில் இருந்து சிறப்பு மருந்து வரவழைக்கப்பட்டு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது.

அதன்பிறகு உடல்நிலை தேறி வந்த நிலையில், இன்று மாலை 5-00 மணியளவில் ஆய்வாளர் பாலமுரளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல் துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த முதல் நபர் பாலமுரளி ஆவார்.

 

சார்ந்த செய்திகள்