Published on 08/05/2021 | Edited on 08/05/2021
திருச்சி பெல் நிறுவனத்தில் தமிழகம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில், சுமார் 1,500 குடும்பங்கள் பெல் நிறுவன வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். தற்போது இவர்களில் 200 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1,500 குடும்பங்களுக்கும் பெல் நிறுவன மருத்துவக்குழு பரிசோதனை மேற்கொள்ளும் பணியைத் தொடங்கியுள்ளது. எனவே முதல் கட்டமாக இன்று முதல் வருகின்ற திங்கட்கிழமை வரை பெல் நிறுவனம் முழுமையாக மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரித்தால் இந்த ஊரடங்கு காலத்தில் பெல் நிறுவனம் மூடுவதற்குக் கூடுதலான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.