வெளிநாடுகளில் தவித்துக்கொண்டிருக்கக் கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர்களை மீட்கும் விதமாக மத்திய அரசு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய், சார்ஜா, சவுதி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிநாடுகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களைத் தாயகத்திற்கு அழைத்துவரும் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றிவரும் நிலையில், தாயகம் திரும்ப விரும்புபவர்களின் பட்டியலைத் தயார்செய்து, அவர்களை விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்துவருகின்றனர். அதில் திருச்சி விமான நிலையத்திற்கு வரக் கூடிய பயணிகளின் உடைமைகளைக் கையாளும் விமான நிலைய ஊழியர்களுக்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆறு ஊழியர்களுக்கு, உடைமைகளைக் கையாள்வதன் மூலம் கரோனா பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கரோனா நோய்த் தாக்கம் இல்லாதவர்களாக அவர்களை மீட்டு வர வேண்டுமென்றும் அவர்களது உடைமைகளை முறையாக மருந்து தெளிப்பான் மூலம் பாதுகாக்க வேண்டும் என்றும் விமான நிலைய ஊழியர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.