Skip to main content

கரோனா விதியை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு சீல், அபராதம்!!!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020
ddd

 

 

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை கரோனா நோய் தாக்கப்பட்டவர்கள் 6.50 லட்சம். மேலும் இந்நோயால் இதுவரை 10 ஆயிரம் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். ஆனால் மக்களிடம் கரோனா பற்றிய பயம் குறைந்துள்ளது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடக்கம், வியாபார நிறுவனங்கள், கோயில்கள் திறப்பு போன்ற பல பகுதிகளில் மக்கள், தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. அதேபோல் 30 சதவித மக்கள் முகத்துக்கான மாஸ்க் போடாமல் வலம் வருகின்றனர்.

 

 

ddd


அரசின் கரோனா விதிகளை கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் கரோனா பரவல் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காத ராமன் பல் மருத்துவமனை மற்றும் வாரி கட்பீஸ் என இரண்டு தொழில் நிறுவனங்களை பூட்டினர். அதோடு அவைகளுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் வட்டாட்சியர் பத்மநாபன்.

 

அதேபோல் முக கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டிய வாகன ஓட்டிகளை நிறுத்தி, முககவசம், கரோனாவை எந்தளவுக்கு தடுக்கும் என்பதை தனது மருத்துவ குழு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு முககவசம் வழங்கி அனுப்பிவைத்தார் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் உத்தரவு; ஆய்வுக்குப் பிறகு 59 கடைகளுக்கு சீல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
59 shops sealed for selling banned tobacco products in Erode

முதல் - அமைச்சர் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பள்ளி கல்லூரி அருகிலும், கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு மேற்கொண்டதில் 59 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 59 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டு ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையினர் கொண்ட குழுவினர் முன்னிலையில்  வெண்டிபாளையம் மாநகராட்சி உரக்கடங்கில் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்திற்கு சீல்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
BJP Election office sealed

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பா.ஜ.க. சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர் ராஜா தலைமையில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.