Skip to main content

தலைமைச் செயலகத்தை கரோனாவிலிருந்து பாதுகாக்கும் ஏற்பாடுகள்..! (படங்கள்)

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

 

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,171 ஆக அதிகரித்துள்ளது. 162 நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1,82,598 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 125 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை மூன்று பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

 
இன்னிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கப்படுவதோடு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. சென்னை, தலைமைச் செயலகத்திற்கு வரும் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து, அவர்கள் கைகளைக் கழுவுவதற்கும் கிரிமி நாசினி வழங்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்