தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 619லிருந்து அதிகரித்து 739 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகம். தமிழகத்தில் 728 பேருக்கும், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்த 11 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,03,692 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 294 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 194 என்று இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,758 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6,654 ஆக உள்ளது. கோவை-78, ஈரோடு-34, செங்கல்பட்டு-64, திருவள்ளூர்-33, காஞ்சிபுரம்-31, நாமக்கல்-19, சேலம்-28, திருப்பூர்-24 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் மேலும் ஒரு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.