Skip to main content

ஹெலிகாப்டர் சகோதரரில் ஒருவருக்கு கரோனா!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

Corona to one of the helicopter brothers!

 

கும்பகோணத்தில் நிதிநிறுவனம் என்கிற பெயரில் பல கோடி மோசடி செய்து தலைமறைவான பாஜக பிரமுகர்கள் கணேஷ் மற்றும் சுவாமிநாதனை போலீஸார் கடந்த 6 ஆம் தேதி கைது செய்தனர். 

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் தீட்சதர் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் விக்டரி என்கிற பெயரில் நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு மாடுகளைக் கொண்டு மூன்று இடங்களில் பால் பண்ணை, ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுவது எனப் பல தொழில்களை செய்துவந்தனர். எப்போதும் இரு சகோதரர்களும் ஒன்றாகவே ஹெலிகாப்டரில் வலம் வந்ததால், இவர்களை ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்ற பெயரிலேயே பலரும் அழைத்தனர்.

 

Corona to one of the helicopter brothers!

 

இவர்களது நிதி நிறுவனத்தில், ஒன்று கொடுத்தால் மூன்று என்பது போல கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்ததும், பலதரப்பட்ட மக்கள் கோடிக்கணக்கில் முதலீடாக கொடுத்த பணத்தை ஏமாற்றியதாகப் புகார்கள் எழுந்த நிலையில், பாதுகாப்புக்காக பாஜகவில் ஐக்கியமாகி பல கூட்டங்களில் கலந்துகொண்டதோடு, வேல் யாத்திரை வந்த அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு உபசரிப்பு செய்ததோடு, அவருக்கு லட்சக்கணக்கான நிதியும் கொடுத்ததாக அப்போது பாஜகவில் பேசப்பட்டது. அதேபோல் கருப்பு முருகானந்தம், எச்.ராஜா உள்ளிட்டவர்களும், இந்தச் சகோதரர்களோடு நெருக்கமாக இருந்தனர் என்ற தகவலும் வெளியாகின. புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த இரண்டு சகோதரர்களையும் கடந்த 06.08.2021 அன்று போலீசார் கைது செய்தனர்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்