Skip to main content

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா...!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா  தொற்று  இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் மாவட்ட வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,

 

 Corona for how many in any district


கோவையில் 60 பேருக்கும், திண்டுக்கல் 46 பேருக்கும், நெல்லையில் 40 பேருக்கும், சென்னையில் ஒரே நாளில் 7 பேருக்கும் கரோனா உறுதியான நிலையில் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. தேனியில் 16 பேருக்கு புதிதாக கரோனா உறுதியான நிலையில், 39 பேராக உயர்ந்துள்ளது. 
 

nakkheeran app



ஈரோட்டில் 32 பேருக்கும், திருச்சியில் 36 பேருக்கும், நாமக்கல்லில் 38 பேருக்கும், ராணிப்பேட்டையில் 27 பேருக்கும், செங்கல்பட்டில் 24 பேருக்கும், கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 24 பேருக்கும், கரூரில் 23 பேருக்கும், திருப்பூரில்22 பேருக்கும், தூத்துக்குடியில் 17 பேருக்கும், விழுப்புரத்தில் 20 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்