கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குடும்ப அட்டைகளுக்கு ஒரு மாதம் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் 3 மாதங்களுக்கு அரிசி, பருப்பு வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். முதல் மாதம் பணமும் அடுத்தடுத்த மாதங்களில் அரிசி பொருளும் மக்கள் வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற நிலையில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் போது புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் எல்லைப் பகுதியில் உள்ள எல்.என்.புரம் ஊராட்சி தடியமனை மற்றும் புள்ளாண்விடுதி ஆகிய கிராமங்களுக்குள் சென்ற மர்ம கும்பல் ஒன்று வீடுகளில் தனிமையில் இருந்த பெண்களிடம் கரோனா குறையவில்லை அதனால் மறுபடியும் ஊரடங்கு போடப்போறாங்க உங்களுக்கு மாதம் ஆயிரம் பணமும், உணவுப் பொருளும் அரசாங்கம் கொடுக்கப் போகிறது. அதற்கு விண்ணப்பம் கொடுக்கனும் அதற்கு ரூ.3000 வரை செலவாகும். பணம் கொடுத்தால் அந்தப் பயனாளிகள் பட்டியலில் உங்களை சேர்த்துவிடுவோம் என்று கூறி தலா ரூ 3 ஆயிரம் வீதம் பல பெண்களிடம் வசூலித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
பணத்தைக் கொடுத்து ஏமார்ந்த பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். கரோனா காலத்தில் குடும்பச் செலவுக்கே பணமின்றி தவிக்கும் ஏழைகளிடம் இ்ப்படி மோசடியில் ஈடுபட்டவர்களை உடனே பிடிக்காவிட்டால் எத்தனை பேரை ஏமாற்றுவார்களோ?