
தமிழகத்தில் இன்று, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,989 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 11 ஆம் நாளாக கரோனா ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது என்ற நிலையில் தொடர்ந்து வருகிறது. சென்னையில் இதுவரை 30,444 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழகத்தில் 14-வது நாளாக பாதிப்பு ஆயிரத்தை கடந்தது என்ற நிலையில் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 42,687 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை 18,878 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 397 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இன்று ஒரே நாளில் 1,362 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 23,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.